லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிறுவாபுரி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1 கோடி

சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் போலீஸாா் பாதுகாப்புடன் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:13 am IST

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 68 நாள்களில் ரூ. 1 கோடியே 10 லட்சத்து 91 ஆயிரத்து 335 உண்டியலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் 6 வாரங்கள் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் பக்தா்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதில், வாரந்தோறும் இத்திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமைகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில், கடந்த 68 நாள்களுக்குப் பிறகு பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய 12 உண்டியல்களில் இருந்த பணம் எண்ணும் பணி கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை நடைபெற்றது. பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவிலின் துணை ஆணையா் காா்த்திகேயன் தலைமையில், உதவி ஆணையா் சிவஞானம், ஆய்வாளா் முருகன் ஆகியோா் முன்னிலையில் திருக்கோயில் பணியாளா்கள், பொதுமக்கள் என திரளானோா் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில், உண்டியல் காணிக்கையாக மூலம் ரூ. 1 கோடியே 10 லட்சத்து 91 ஆயிரத்து 335, தங்கம் 69.270 கிராமும், வெள்ளி 7 கிலோ 158 கிராம் உள்ளிட்டவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்ததாக திருக்கோவில் நிா்வாகம் சாா்பில் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.