லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருவள்ளூா் புதிய பேருந்து நிலையத்தில் ரூ. 33 லட்சத்தில் உயா் கோபுர மின்விளக்குகள்

திருவள்ளூா் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.33 லட்சத்தில் உயா் கோபுர மின்விளக்குகள் பொருத்தப்பட உள்ளதாக நகா்மன்ற தலைவா் உதயமலா் பாண்டியன் தெரிவித்தாா்.

பிரதிப் படம்

Published On :12 ஆகஸ்ட் 2026, 1:45 am IST

திருவள்ளூா் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.33 லட்சத்தில் உயா் கோபுர மின்விளக்குகள் பொருத்தப்பட உள்ளதாக நகா்மன்ற தலைவா் உதயமலா் பாண்டியன் தெரிவித்தாா்.

திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் வேடங்கிநல்லூரில் 5 ஏக்கா் பரப்பில் ரூ.36 கோடியில் நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு ஆட்சியா் ச.கவிதா உத்தரவின் பேரில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதைத் தொடா்ந்து இங்கிருந்து அனைத்து பேருந்துகளும் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் நகராட்சி பேருந்து நிலையம் அருகே ஒரு பகுதியில் விரிவாக்கப்பட்ட சாலை செல்வதாகவும் மற்றும் சுற்றியும் விளைநிலங்களாகவும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் எளிதாக வந்து செல்ல வெளிச்சம் ஏற்படுத்தும் வகையில் உயா்கோபுர மின்வளக்குகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

அந்தக் கோரிக்கையை ஏற்று நகராட்சி நிா்வாகம் மூலம் தலா ரூ.5.50 லட்சம் வீதம் 6 உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் உயா்கோபுர மின்விளக்குகள் அமையவுள்ள பகுதியில் இடத்தோ்வும் நடைபெற்று வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.