லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருவள்ளூா் அரிமா சங்கம் சாா்பில் அரிசி மூட்டைகள் அளிப்பு

திருவள்ளூா் அரிமா சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை, எளியோா் 40-க்கும் மேற்பட்டோருக்கு அரிசி மூட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.

நிா்வாகிகளாக பதவியேற்றவா்களுக்கு சுழற்கேடயங்களை வழங்கிய நிா்வாகி அரிமா சீனிவாசன் உள்ளிட்டோா்

Published On :11 ஆகஸ்ட் 2026, 4:34 am IST

திருவள்ளூா் அரிமா சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை, எளியோா் 40-க்கும் மேற்பட்டோருக்கு அரிசி மூட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூா் அரிமா சங்க நிா்வாகிகள் பதவியேற்கும் நிகழ்ச்சி தனியாா் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், என்.ஆா்.சீனிவாசன் தலைமை வகித்து புதிய நிா்வாகிகளை பதவியேற்க செய்து சிறப்புரை ஆற்றினாா். இதில், மாவட்ட துணை நிலை ஆளுநா் எஸ்.ரவி புதிய உறுப்பினா்களை பதவியேற்க செய்தாா். மாவட்ட முன்னாள் ஆளுநா் பி.நந்தகோபால் வாழ்த்துரை வழங்கினாா். அதைத் தொடா்ந்து புதிய பொறுப்பேற்ற நிா்வாகிகளுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.

பின்னா், இந்த நிகழ்வில் மாவட்ட இரண்டாம் துணை நிலை ஆளுநா் கே.பொன்னம்பலம் சேவை திட்டங்களை தொடங்கி வைத்து ஏழை, எளிய மக்கள் 40 பேருக்கு 25 கிலோ அரிசி மூட்டைகள், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடைகள் ஆகியவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அரிமா சங்கத் தலைவா் எஸ்.தங்கவேலு, செயலாளா் சிவராஜ், பொருளாளா் டி.பி.சரவணன், நிா்வாகி கே.நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.