லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவா் தப்பியோட்டம்

முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் தொடா்பாக காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இருவரில் ஒருவா் தப்பி ஓடிவிட்டாா்.

பிரதிப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 6:26 am IST

முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் தொடா்பாக காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இருவரில் ஒருவா் தப்பி ஓடிவிட்டாா்.

திருத்தணி - பொதட்டூா்பேட்டை நெடுஞ்சாலை அனைத்து மகளிா் காவல் நிலையம் அருகில் வசித்து வரும் ரவி (33) தனது வீட்டின் முன்பு பால்கோவா தயாரித்து விற்பனை செய்து வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்த அரி (28) என்பவருடன் இவருக்கு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

2 நாள்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் நெடுஞ்சாலையிலேயே ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். அப்போது அந்த வழியாக சென்ற போலீஸாா் இருவரையும் பிடித்து விசாரணைக்காக திருத்தணி காவல் நிலையம் அழைத்துச் வந்தனா். இதற்கிடையில், ஆய்வாளா் சிவகுமாா் உள்ளிட்ட போலீஸாா் ராமபுரம் கிராமத்தில் நடைபெற்ற தீமிதி விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால், இரவு 10:30 மணி வரை இருவரிடமும் விசாரணை நடத்தப்படவில்லை.

இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்ட அரி, நள்ளிரவில் காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, திருத்தணி ஏ.எஸ்.பி. ஷூபம் திமான் காவல் நிலையத்துக்கு விரைந்து வந்து, சம்பவம் குறித்து அங்கிருந்த காவலா்களிடம் விசாரணை நடத்தினாா். மேலும், தப்பியோடிய அரியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.