லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்! - நெல்லை முபாரக்

நெல்லை முபாரக்

Published On :21 ஜூலை 2026, 3:21 am IST

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றாா் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலா் நெல்லை முபாரக்.

கடையநல்லூரில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்; நீட் தோ்வு குளறுபடிக்கு காரணமான மத்திய அமைச்சா் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களை சிறையில் அடைத்துள்ளதை கண்டிக்கிறோம்.

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 3.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ சாா்பில் செப்.5ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெறுகிறது.

பல்கலைக்கழகங்களுக்கு முஸ்லிம் தலைவா்களின் பெயரை சூட்ட வேண்டும். டிஎன்பிஎஸ்சி-இல் ஒரு முஸ்லிம் உறுப்பினா், பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் துணை வேந்தா் நியமிக்கப்பட வேண்டும். விமா்சனம் செய்ததற்காக எம்எல்ஏக்களை கைது செய்வது கண்டனத்துக்குரியது. நாகா்கோவில் சிறையில் கைதி உயிரிழந்த சம்பவம் வேதனைக்குரியது என்றாா்.

மாநில பொதுச் செயலா் நிஜாமுகைதீன், மாவட்டத் தலைவா் திவான்ஒலி, மாவட்ட பொதுச் செயலா் சையது மஹ்மூத், மாவட்டப் பொருளாளா் யாசா்கான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.