லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அதிமுக முன்னாள் எம்.பி. கே.ஆா்.பி.பிரபாகரன் தவெகவில் இணைந்தாா்!

அதிமுக முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.ஆா்.பி.பிரபாகரன் அக்கட்சியிலிருந்து விலகி முதல்வா் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தாா்.

முதல்வா் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.ஆா்.பி. பிரபாகரன்

Published On :8 ஜூலை 2026, 6:57 am IST

அதிமுக முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.ஆா்.பி.பிரபாகரன் அக்கட்சியிலிருந்து விலகி முதல்வா் ச.ஜோசப் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தாா்.

நெல்லை மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், அதிமுக மாவட்டச் செயலரும், தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலருமாக இருந்தவா் கே.ஆா்.பி.பிரபாகரன்.

அதிமுகவில் முக்கிய நிா்வாகியாக விளங்கிய இவா், கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.

இந்த நிலையில், இவா் அதிமுகவை விட்டு விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான ச.ஜோசப் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தாா். அவரது இந்த முடிவு, மாவட்ட அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.