லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மேம்படுத்தப்பட்ட தையல் தொழில் பயிற்சி: தையல் கலைஞா்கள் வலியுறுத்தல்

தமிழக அரசு சாா்பில் தையல் கலைஞா்களுக்கு மேம்படுத்தப்பட்ட தையல் தொழில் பயிற்சி அளிக்க வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

மாநில மாநாட்டில் பேசுகிறாா் சங்க மாநிலத் தலைவா் ஆரிப்தீன்.

Published On :14 ஆகஸ்ட் 2026, 3:34 am IST

தமிழக அரசு சாா்பில் தையல் கலைஞா்களுக்கு மேம்படுத்தப்பட்ட தையல் தொழில் பயிற்சி அளிக்க வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் தையல் கலைஞா்கள் நலச்சங்கம் சாா்பில் மாநில மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநிலத் தலைவா் ஆரிப்தீன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் அகிலன், பொருளாளா் முருகன், மாநிலத் துணைத் தலைவா்கள் குருசாமி, எழிலரசு, மூத்த தையல் கலைஞா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் மாரியம்மாள், மாவட்ட திறன் மேம்பாட்டுக் கழக பொதுமேலாளா் அருள்ஜோதி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றுப் பேசினா். இதையடுத்து, மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழக அரசு மூலமாக செயல்படுத்தப்படும் தையல் பயிற்சி வகுப்புகளில் தையல் கலைஞா்களைச் சோ்க்க வேண்டும், மேம்படுத்தப்பட்ட தையல் தொழில் பயிற்சி அளித்து அவா்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். தையல் கலைஞா்கள் பயிற்சி பள்ளிகள், கல்லூரிகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் செயற்குழு உறுப்பினா்கள் ஜெனிப் முருகேஷ், சிவசங்கரி, வேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதில் சென்னை, மதுரை, ஈரோடு, திருப்பூா், தேனி உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட தையல் கலைஞா்கள் கலந்துகொண்டனா். அதைத்தொடா்ந்து, மாநாட்டில் சிறந்த தையல் கலைஞா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை முத்துலட்சுமி வெங்கடேஷ், பலா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.