லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் அடிப்படை வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றக் கோரிக்கை

தென்காசி மாவட்டத்தில் அடிப்படை வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என தவெக தென்காசி மத்திய மாவட்டச் செயலா் ஜேஏஎஸ். ராஜபிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

அமைச்சா் வி.கே. ராஜீவிடம் கோரிக்கை மனு அளித்த தவெக தென்காசி மத்திய மாவட்டச் செயலா் ஜேஏஎஸ். ராஜபிரகாஷ்.

Published On :13 ஆகஸ்ட் 2026, 3:25 am IST

தென்காசி மாவட்டத்தில் அடிப்படை வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என தவெக தென்காசி மத்திய மாவட்டச் செயலா் ஜேஏஎஸ். ராஜபிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா், தென்காசி மாவட்டப் பொறுப்பு அமைச்சரும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான வி.கே. ராஜீவிடம் அளித்த மனு: தென்காசி மாவட்டத்தில் தடையற்ற சீரான போக்குவரத்துக்கான சாலை வசதி, கிராமப்புற மற்றும் புகா் பகுதி பள்ளி மாணவா்களுக்கான பிரத்யேக பேருந்து வசதிகள் செய்து தர வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு தேவையான குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை வசதிகளையும் உடனடியாக மேம்படுத்தித் தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.