தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

திருவாரூர் அருகே மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் பலி: தலா ரூ.3 லட்சம் நிதியுதவி- முதல்வர் விஜய் அறிவிப்பு

மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜோசப் விஜய் ஆறுதல் கூறியுள்ளதுடன் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

TN CM Vijay announces Relief

முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப்படம்

Published On :31 அக்டோபர் 2026, 2:59 pm IST

மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜோசப் விஜய் ஆறுதல் கூறியுள்ளதுடன் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

திருவாரூர் மாவட்டம், புதூர் கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜோசப் விஜய் ஆறுதல் கூறியுள்ளதுடன் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

இதுபற்றி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

திருவாரூர் மாவட்டம், புதூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா(49) மற்றும் அவரது மகன் ஆதித்யன் (21) ஆகியோர் கடந்த 5.10.2026 ஆம் தேதி விவசாயக் கூலி வேலைக்காக நஞ்சை நிலத்தில் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தபோது, உயர் அழுத்த மின்பாதை மின்கம்பத்தில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் மோதியதில் மின்கம்பத்தில் இருந்த ‘வீ கிராசாரம்’மின்கம்பியுடன் டிராக்டர் மீது விழுந்ததில், டிராக்டர் ஓட்டிக்கொண்டிருந்த ஆதித்யன் மீது மின்சாரம் பாய்ந்ததோடு, அருகில் வேலை செய்துகொண்டிருந்த அவரது தந்தை ராஜா, இவரைக் காப்பாற்ற முயன்றபோது அவர்மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

CM Condolence and Relief - Electrocution death at Thiruvarur Dist CMPRF

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.