பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா பதில்

திமுக கூட்டணியில் பிரேமலதா விஜயகாந்த் துரந்தராக செயல்படுவதாக ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியிருந்ததற்கு பிரேமலதா பதில்...

News image

செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் - எக்ஸ்

Updated On :31 மே 2026, 7:06 pm IST

தவெக அமைச்சராக உள்ள ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (மே 31) தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் பிரேமலதா விஜயகாந்த் துரந்தராக செயல்படுவதாக ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதற்கு பதில் அளிக்கும் விதமாக பிரேமலதா இவ்வாறு பேசியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது துரந்தர் விமர்சனத்துக்கு பதில் அளித்து பிரேமலா விஜயகாந்த் பேசியதாவது:

மதச்சார்பற்ற கூட்டணியில் துரந்தராக தேமுதிக உள்ளதாக ஆதவ் அர்ஜுனா கூறினார். அதன் பிறகு சமூக வலைதளங்களில் அது வைரலானது. துரந்தர் என்றால் என்ன பொருள் என்று எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை.

அது ஒரு திரைப்படம் என்று எனக்கு பின்னர்தான் தெரிந்தது. அதில் ஒரு பாத்திரம் உளவாளியாக செயல்பட்டு திட்டங்களை நிறைவேற்றும்.

துரந்தர் என்பது ஹிந்தி வார்த்தை. அவரின் இந்த விமர்சனத்துக்கு ஹிந்தி தெரியாதுபோடா! என்று என்னால் பதில் சொல்லிவிட்டுச் செல்ல முடியும். ஆனால், அர்த்தத்துடன் பேச வேண்டும். தேமுதிக என்றுமே மக்களுக்காகத்தான் பேசும்.

சேலத்தில் நடைபெற்ற பெண்கள் பொதுக்கூட்டத்தில் பேசியபோது இந்த (திமுக) ஆட்சியில் பாலியல் வன்கொடுமை, சட்டம் - ஒழுங்கு பிரச்னை என இரண்டு பிரச்னைகள்தான் கூற முடியும். ஆனால் மீண்டும் ஆட்சி அமைத்ததும் இந்த இரண்டையும் மு.க. ஸ்டாலின் சரி செய்வார் என்றுதான் கூறினேன்.

ஆனால், முதல்வரை மேடையில் வைத்துக்கொண்டே எப்படி இவ்வாறு பேசலாம் என்று பலர் விமர்சித்தனர். கூட்டணியில் இருந்துகொண்டே பேசுவதாக விமர்சிக்கின்றனர். ஒரு உண்மையை பெரிதாகப் பேசக்கூடாதா? மக்கள் நலனுக்காக குரல் கொடுக்கக்கூடாதா?

தவறாக எடுத்துக்கொள்ள வேண்டிய திமுகவே பெரிதுபடுத்தவில்லை. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினே அதை பெரிய மனதுடன் ஏற்றுக்கொண்டார். ஆதவ் அஜுனாவுக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. தவெகவில் உள்ள ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது என பிரேமலதா குறிப்பிட்டார்.

Summary

TVK Adhav Arjuna does not turn into a Durandhar DMDK General Secretary Premalatha Vijayakant

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.