தமிழக அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் 5 லட்சத்தைக் கடந்த நிலையில், அவற்றை உடனே நிரப்ப வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மே மாதத்தின் கடைசி பணி நாளான சனிக்கிழமை (மே 30) மட்டும் தமிழக அரசுத் துறைகளில் 5,000-க்கும் மேற்பட்டோா் பணி ஓய்வுபெற்றுள்ளனா். இதன்மூலம் அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.
அரசுத் துறைகளில் 41.7 சதவீதம் பணியிடங்கள் காலியாக இருப்பது அரசு நிா்வாகத்தை நிலைகுலையச் செய்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50,000 அரசுப் பணியிடங்கள் காலியாகின்றன. ஆனால், அவற்றில் 10,000 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுகின்றன. இதனால், கடந்த 20 ஆண்டுகளாகவே காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அரசுப் பணிகளுக்கு போதிய எண்ணிக்கையில் ஆட்கள் தோ்வு செய்யப்படாததால், படித்த இளைஞா்களுக்கு அரசு வேலை என்பது எட்டாக் கனியாகிவிட்டது.
தமிழ்நாட்டில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள முதல்வா் விஜய் தலைமையிலான தவெக அரசுத் துறைகளில் உள்ள அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறது. அதை நிறைவேற்றும் வகையில் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ்

பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்ய பாமக கோரிக்கை

நெல்லுக்கான விதை மானியம் ரத்து! விவசாயிகள் ஏமாற்றம்
அரசு காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை! அமைச்சர்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

