சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்! விமான நிலையத்திலிருந்து சாலைவலம்!

முதல்வர் விஜய் நாளை(ஜூன் 1) திருச்சியில் சாலைவலம் மேற்கொள்ளவிருப்பது தொடர்பாக...

News image

முதல்வர் விஜய் - கோப்புப்படம்

Updated On :31 மே 2026, 9:27 am IST

திருச்சி கிழக்குத் தொகுதி உள்பட திருச்சி மாவட்டத்தின் 6 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வெற்றி தேடித் தந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர் ஜோசப் விஜய் நாளை(ஜூன் 1) திருச்சி செல்கிறார்.

தவெக தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய், தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல்முறையாக முதல்வர் பதவியுடன் திருச்சிக்கு வருகிறார். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு திங்கள்கிழமை மாலை வரும் அவர், விமான நிலையத்திலிருந்து பிரத்யேக வாகனத்தில், பலத்தப் பாதுகாப்புடன் திருச்சி-புதுக்கோட்டை சாலை, சுப்பிரமணியபுரம், டிவிஎஸ் சோதனைச் சாவடி, பழைய பால்பண்ணை, திருச்சி-சென்னை புறவழிச் சாலை, சஞ்சீவி நகர், சத்திரம் பேருந்து நிலையம் வழியாக தூய வளனார் கல்லூரி திடலுக்கு வருகிறார்.

இதற்காக திடலில் விழா மேடையும், பந்தலும் அமைக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் விழாவில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றுகிறார்.

முதல்வர் கூட்டம் நடைபெறும் தூய வளனார் கல்லூரி மைதானத்தில் மேடை மற்றும் பிரம்மாண்ட பந்தல் என விழாவுக்கான ஏற்பாடுகள் இரவு, பகலாக நடைபெறுகின்றன. முதல்வர் சிறிது ஓய்வெடுக்கும் வகையில் விழா மேடைக்கு அருகே தனியே 3 குளிரூட்டப்பட்ட குடில்களும் தயாராகின்றன.

சாலையில் மக்கள் சந்திப்பு

கட்சி தொடங்கிய பிறகு தேர்தல் பிரசாரத்தை முதன்முதலாக திருச்சியிலிருந்துதான் தொடங்கிய தவெக தலைவர் ஜோசப் விஜய், தேர்தல் வெற்றிக்குப் பிறகு நடைபெறும் முதல் நன்றி அறிவிப்புக் கூட்டத்தையும் திருச்சியில் தொடங்குகிறார்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து, தூய வளனார் கல்லூரி வரை சுமார் 13 கி.மீ. தொலைவுக்கு சாலையில் மக்களைச் சந்திக்கவுள்ளார்.

இதற்காக சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து தொண்டர்கள், பொதுமக்களை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. சாலையில் வரும் முதல்வர் ஜோசப் விஜய், வாகனத்திலிருந்தபடியே தொண்டர்களையும், மக்களையும் பாா்த்து கையசைத்தபடியே செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Summary

Regarding Chief Minister Vijay's planned roadshow in Trichy tomorrow (June 1).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.