தமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாற்ற முயற்சி: அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!

காவி உடையில் வள்ளுவரைச் சித்திரித்ததற்கு தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image

அமைச்சர் வன்னி அரசு / காவி உடையில் வள்ளுவர் - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 7:18 pm IST

காவி உடையில் வள்ளுவரைச் சித்திரித்ததற்கு தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை (மே 30) ‘வைகாசி அனுஷம் வள்ளுவர் திருநாள்’ என்ற பெயரில் திருவள்ளுவரைச் சிறப்பித்து விழா கொண்டாடப்பட்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் படத்தில் அவர் காவி உடையில் இருந்தது சர்ச்சையாகியுள்ளது.

மேலும், தமிழகத்தில் தைப் பொங்கல் முடிந்த அடுத்த நாள் மாட்டுப் பொங்கலன்று திருவள்ளுவர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்த நிலையில், திருவள்ளுவருக்கு வைகாசியில் தனியே விழா கொண்டாடுடியதும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், “இது வன்மையான கண்டனத்திற்குரியது. கடந்த முறை ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி தொடர்ந்து இத்தகைய முயற்சிகளை செய்து வந்தார். தமிழ்நாட்டை காவிமயப்படுத்த ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ். மாளிகையாக மாற்ற முயற்சி செய்திறார்கள். சனாதனத்தின் அடையாளமாக வள்ளுவரை மாற்ற முயற்சி செய்கிறார்கள். ஆனால், இது ஒருபோதும் நடக்காது.

ஏன் இதைச் சொல்கிறோமென்றால் இப்போதுள்ள ஆளுநர் அர்லேகர் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என அனைவருக்கும் தெரியும். ஆர்.என்.ரவியும் ஆர்.எஸ்.எஸ்.காரர் தான். அவர்கள் வள்ளுவரை இவ்வாறு நிறுவ முயற்சி செய்கிறார்கள். கட்டாயம் இதைத் தடுத்து நிறுத்துவதற்கு எல்லா வகையிலும் முயலுவோம். தமிழக முதல்வருடன் கலந்துபேசி இதை நிறுத்துவதற்கான முயற்சியை எடுப்போம். ஐயன் திருவள்ளுவர் எல்லோருக்குமானவர். அவரைத் தொடர்ந்து சனாதன உடையில் உங்களுக்கானவராக மாற்ற முயற்சிப்பது வீண் வேலை. தமிழ்நாட்டில் இது நடக்காது.

Summary

Attempt to Transform Governor's Residence into 'RSS Residence': Minister Vanni Arasu Condemns

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.