பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!

தென்மேற்குப் பருவமழை தொடங்குவது பற்றி..

News image

பருவமழை - file photo

Updated On :30 மே 2026, 1:55 pm IST

தமிழகத்தில் 5 நாள்களுக்குள் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த ஓரிரு மாதங்களாகக் கோடை வெய்யில் சுட்டெரித்துவரும் வருகின்றது. இந்தநிலையில், விவசாயிகளின் முதுகெலும்பாகத் திகழும் தென்மேற்குப் பருவமழை வழக்கமாக ஜூன் 1-ல் தொடங்கும், ஆனால் இம்முறை ஜூன் 5 ஆம் தேதி தொடங்கும் சூழல் காணப்படுகிறது. முன்னதாக, மே 26-ல் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், வட நாடுகளில் அதிகப்படியான வெய்யில் நிலவி வருவதையடுத்து, பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை ஏற்கெனவே தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் தொடங்கியது. இந்த நிலையில், அடுத்த 5 நாள்களில் தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது. அதன்படி, தமிழகம், கேரளம், லட்சத்தீவு, அரபிக்கடல், தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மழை தொடங்கும்.

கேரளத்தில் அடுத்த 7 நாள்களுக்குள் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. எல்நினோ விளைவு ஜூன் மாதம் வலுவிழந்து செப்டம்பரில் மீண்டும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஜூன் மாதத்தில் வழக்கத்தைவிட (நீண்ட கால சராசரி மழைப்பொழிவில் 92 சதவீதம்) மழைப்பொழிவு குறைவாகவே இருக்கும். நீண்ட கால சராசரி மழைப்பொழிவு 90 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே அது பற்றாக்குறையாகக் கருதப்படும் என வானிலை ஆராய்ச்சி மையத் தலைவர் கூறியுள்ளார்.

The India Meteorological Department has informed that the Southwest monsoon will commence in Tamil Nadu within five days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.