பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

தமிழகத்தில் ஜூன் 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒருசில இடங்களில் ஜூன் 1 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 3:02 am IST

தமிழகத்தில் ஒருசில இடங்களில் ஜூன் 1 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (மே 27) முதல் ஜூன் 1 வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தெற்கு வங்கக் கடல் பகுதிகள், அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் புதன்கிழமை (மே 27) சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக் கடலில் மே 30-ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

10 இடங்களில் வெயில் சதம்: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் மே 30 வரை சற்று அதிகமாக இருக்கக்கூடும். செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக வேலூா் மாவட்டத்தில் 106.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. சென்னை மீனம்பாக்கம், திருத்தணி- 105.98, மதுரை நகரம்-102.92, பாளையங்கோட்டை, புதுச்சேரி, நுங்கம்பாக்கம்-102.38, மதுரை விமான நிலையம்-101.3, கடலூா்-100.94, தஞ்சாவூா்-100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் வேலூா் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் 80 மி.மீ. மழை பதிவானது. மேலும், கக்கதாசம் (கிருஷ்ணகிரி)- 60 மி.மீ., மதகொண்டப்பள்ளி, தளி கொத்தனூா் (கிருஷ்ணகிரி)-50 மி.மீ. மழை பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.