பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஒரு மாதத்திற்குள் தமிழகத்தை இருளில் மூழ்கடித்த தவெக அரசு! நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் மின்வெட்டு குறித்து நயினார் நாகேந்திரன் பதிவு...

News image

கோப்புப் படம் - ANI

Updated On :23 மே 2026, 5:00 pm IST

தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் கிடைக்க முதல்வர் ஜோசப் விஜய், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமென தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் தமிழகத்தை இருளில் மூழ்கடித்த தவெக அரசு!

தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட பிற முக்கியப் பகுதிகளில் தொடர் மின்வெட்டு காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த முறை தமிழகத்தை தவிக்க வைத்த திமுக அரசுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தற்போதைய தவெக அரசும் மக்களை இப்படி வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கொளுத்தும் அக்னி வெயிலில் மின்சாரத்தைத் துண்டித்து குழந்தைகளையும் முதியவர்களையும் படாதபாடு படுத்துவதுதான் தவெக தம்பட்டம் அடித்த மாற்று அரசியலா?

ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறிவிட்டு, இப்படி மொத்தமாக மாநிலத்தின் மின்சார உபயோகத்தையே தடுத்து நிறுத்துவது அப்பட்டமான ஏமாற்று வேலை.

மேலும், தவெக அரசின் இந்த தொடர் மின்வெட்டால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் முடங்குவதோடு, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே, தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் கிடைக்க முதல்வர் ஜோசப் விஜய் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமென தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, உள்ளூர் மின் தேவை அதிகரிப்பு, நிலத்தடி மின்கம்பி பழுதுகள் உள்ளிட்ட காரணங்களால் சில பகுதிகளில் மின்தடை ஏற்படுவதாகவும் சரிசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

BJP Leader Nainar Nagendran posts regarding power cuts in Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.