தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கத்திரி வெய்யில் கொளுத்திவரும் நிலையில், இந்த நிலை அடுத்து வரும் 2 நாள்களுக்கு நீடிக்கும் எனறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெய்யில் அதன் உச்சத்தை அடைந்துளள்து. சென்னையில் தொடர்ந்து ஒரு சில நாள்களாக 107 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி வருகிறது.
மீனம்பாக்கம் பகுதியில் புதன்கிழமை 107 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியிருந்தது. இந்த ஆண்டில் மிக அதிக வெப்பமான நாளாக அது மாறியது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் அதிகரித்து வரும் வெப்பமானது, மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
கடல் காற்றானது தரைப்பகுதியைத் தொடுவதற்கு தாமதம் ஆவதால் வறண்ட வானிலை ஏற்பட்டு, வெப்பம் கடுமையாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இயல்பான அளவை விட வெப்பமானது 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகும் ஆபத்து உள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இதனால் வெப்பம் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வழக்கமாக கத்திரி வெய்யில் காலங்களில் 104 முதல் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு 107 ஆக உயர்ந்துளள்து. இதனால், மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்.
வெளியில் வேலை செய்வோர், முதியவர்கள் கடும் உடல் உபாதைகளை அனுபவிக்கிறார்கள். தாகம் எடுக்காவிட்டாலும் தண்ணீர் குடிக்க வேண்டும். கருப்பு ஆடைகளை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம், பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்றும் மக்களுக்குக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் வெய்யில் குறையும்! மழைக்கு வாய்ப்பா?

வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!

சுட்டெரித்த கத்திரி வெய்யில் இன்றுடன் நிறைவு! இனியாவது குறையுமா வெப்பம்?

மே 30 வரை வெய்யில் கொளுத்தும்! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை?
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

