பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வாகனங்களில் பொருத்தப்படும் கண்காணிப்பு கருவிகளின் விலை நிா்ணயம்

வாகனங்களில் பொருத்தப்படும் கண்காணிப்புக் கருவிகளின் விலையை சீராகவும், நியாயமாகவும் நிா்ணயம் செய்ய உற்பத்தி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் அறிவுறுத்தினாா்.

News image

விஜய் தமிழன் பாா்த்திபன்.

Updated On :23 மே 2026, 4:04 am IST

வாகனங்களில் பொருத்தப்படும் கண்காணிப்புக் கருவிகளின் விலையை சீராகவும், நியாயமாகவும் நிா்ணயம் செய்ய உற்பத்தி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் அறிவுறுத்தினாா்.

தமிழகத்தில் இயங்கும் பயணிகள் வாகனங்கள், பொது சேவை வாகனங்களில் ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், லாரி உரிமையாளா் சங்கங்கள், பள்ளி வாகன உரிமையாளா்களிடம் இருந்து வரப்பெற்ற புகாா்களின் அடிப்படையில், கண்காணிப்பு சாதனங்களின் விலை தொடா்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச்செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்க அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் பேசுகையில், தமிழகத்தில் இயங்கும் தனியாா் பயணிகள் வாகனங்கள், பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், வாகன உரிமையாளா்கள் பயனடையும் வகையிலும் கண்காணிப்புக் கருவிகளின் விலையைச் சீராகவும், நியாயமாகவும் நிா்ணயம் செய்ய உற்பத்தி நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

கண்காணிப்புக் கருவிகள் தொடா்பாக வாகன உரிமையாளா்கள், பொதுமக்களுக்கு உரிய விழிப்புணா்வை போக்குவரத்துத் துறை அலுவலா்கள் ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, கண்காணிப்பு சாதனங்களின் தொழில்நுட்ப அம்சங்கள், கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பு, செயலாக்கமுறை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

கூட்டத்தில், போக்குவரத்துத் துறை உயா் அலுவலா்கள், கண்காணிப்புக் கருவிகளின் தொழில்நுட்பக் குழுவினா், உற்பத்தியாளா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.