தமிழ்நாடு அமைச்சரவையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தலைநகர் சென்னையில் 7 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டின் முதல்வராக ஜோசப் சி. விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் கடந்த மே 10 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, தவெக கூட்டணி அரசின் அமைச்சரவை விரிவாக்கம் வியாழக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழ்நாடு மக்கள் மாளிகை இன்று (மே 21) காலை வெளியிட்டது.
இந்த நிலையில், தலைநகர் சென்னையில் முதல்வர் விஜய் உள்பட மொத்தமாக 7 பேர் அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர்.
பெரம்பூர் தொகுதியில் இருந்து முதல்வர் விஜய், வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா, தி.நகரில் என். ஆனந்த், மைலாப்பூரில் இருந்து வெங்கட்ரமணன், எழும்பூரில் இருந்து ராஜ்மோகன், ஆர்.கே. நகரில் இருந்து மரிய வில்சன், வேளச்சேரியில் இருந்து குமார் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.
முன்னதாக, சட்டப்பேரவைத்தலைவராக ஆயிரம் விளக்குத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த ஜேசிடி பிரபாகர், அரசுத் தலைமைக் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த சபரிநாதன் இருவரும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
கடந்த திமுக ஆட்சியில் தலைநகர் சென்னையில், அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மட்டும் அமைச்சர்களாக இருந்த நிலையில், தற்போது 7 அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The Tamil Nadu Cabinet, led by Chief Minister C. Joseph Vijay, comprises seven ministers based in the capital city of Chennai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு!
குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க முதல்வர் விஜய் வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் தலைவர் எனக் கூற விஜய்க்கு அதிகாரமில்லை: ஆ. இராசா

விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து 16 அமைச்சர்கள்!
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

