பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: குற்றவாளிகள் விடுதலை ரத்து - உச்ச நீதிமன்றம்

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

News image

டாக்டர் சுப்பையா கொலை வழக்கு

Updated On :19 மே 2026, 11:00 am IST

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்வதாகவும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம், குற்றவாளிகளுக்கான தண்டனையை ரத்து செய்தது மிகப்பெரிய தவறு என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

விசாரணை நீதிமன்ற உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது சரியல்ல, விசாரணை நீதிமன்றம் விசாரித்து அளித்த தீர்ப்பை முறையாக ஆராயாமல் உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும், அதேவேளையில், ஆளுநரிடம் கருணை மனு அளிக்கும் வரையில், வயது முதிர்ந்த இருவருக்கு மட்டும் தற்காலிக நிவாரணம் வழங்கி, பொன்னுசாமி அவரது மனைவி மேரி புஷ்பம் ஆகியோரின் தண்டனையை நிறுத்திவைத்துள்ளது.

2013ஆம் ஆண்டு சென்னை ஆர்.ஏ. புரத்தில் சாலையோரம் நடந்து சென்றபோது, நரம்பியல் மருத்துவர் சுப்பையா படுகொலை செய்யப்பட்டார்.

மருத்துவா் சுப்பையா கொலை வழக்கின் குற்றவாளிகளை சென்னை உயா்நீதிமன்றம் விடுவித்ததை எதிா்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சு கிராமம் பகுதியில் ரூ.10 கோடி மதிப்பிலான 2.25 ஏக்கா் நிலம் தொடா்பான பிரச்னையில், நரம்பியல் மருத்துவா் சுப்பையா என்பவா் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் 2013-ஆம் ஆண்டு செப்.9-ஆம் தேதி பட்டப்பகலில் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். கைதானவா்களில் ஐயப்பன் என்பவா் அப்ரூவராக மாறினாா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பொன்னுசாமி, அவரது மகன்கள் பாசில், போரிஸ் மற்றும் வில்லியம்ஸ், ஜேம்ஸ் சதீஷ்குமாா், முருகன், செல்வ பிரகாஷ் ஆகியோருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம், யேசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து 2021, ஆகஸ்டில் நீதிமன்றம் தீா்ப்பளித்திருந்தது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், குற்றவாளிகள் அனைவரையும் விடுவிடுத்து உத்தரவிட்டது. இத்தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரிக்கப்பட்டு வந்தது.

தமிழக அரசின் தரப்பில் வழக்குரைஞா் டி.குமணனுடன் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதங்களை எடுத்துரைத்தனர்.

முன்னதாக மனுவை ஏற்று விசாரணையின்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ‘பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு பகுதியில் மருத்துவா் ஒருவா் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறாா். அந்த நிகழ்வுகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கின்றன. அனைத்து விசாரணைகளை நடத்தி உரிய ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ஆனால், சென்னை உயா்நீதிமன்றம் அவா்கள் அனைவரையும் விடுதலை செய்திருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இது எங்களுக்கு வியப்பை அளிப்பதாக இருக்கிறது’ என்று கருத்துக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Supreme Court verdict cancels the release of the convicts in the Doctor Subbaiah murder case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.