மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

கிளாண்டர்ஸ் தொற்று: தமிழ்நாடு முழுவதும் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு

தமிழ்நாடு முழுவதும் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது குறித்து...

News image

குதிரை சவாரி - கோப்புப்படம்

Updated On :18 மே 2026, 2:15 pm IST

கிளாண்டர்ஸ் தொற்று பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கிளாண்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

குதிரைகள், கழுதைகள், கோவேறு கழுதைகளைத் தாக்கும் ஒரு வகையான தொற்று. பர்கோல்டெரியா மலேய் எனும் பாக்டீரியா நுண்ணியிரியால் பரவுகிறது.

குதிரை மற்றும் கழுதைகளுக்கு இடையே மிக வேகமாக பரவக் கூடியது. அந்த பாதிப்புக்குள்ளான விலங்குகளின் உடல் முழுவதும் கழலைக் கட்டிகள் (கிளாண்ட்) உருவாகும் என்பதால் இதற்கு கிளாண்டர்ஸ் நோய் என்று பெயர்.

தொற்றுக்குள்ளான விலங்குகளிடம் நேரடித் தொடர்பில் இருப்பவர்களுக்கு கிளாண்டர்ஸ் நோய் பரவும் வாய்ப்புள்ளது. விலங்கின் புண்களில் இருந்து வெளியேறும் திரவம் மனிதர்களின் தோலில் நேரடியாக படுவதால் தொற்று பரவும். தொற்றுக்குள்ளான குதிரை, கழுதைகளின் கண்ணீர், சளி, உமிழ் நீரிலிருந்தும் பரவும். அவை இருமும் போதும், கணைக்கும் போதும் அதில் இருந்து வெளியேறும் நீர்த் திவலைகளை சுவாசிப்பதால் மனிதர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது.

இதனால், சென்னை மெரீனா, பெசன்ட் நகர் கடற்கரைகள், உதகை, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவு உள்ள குதிரையை சவாரிக்கு பயன்படுத்தக் கூடாது என்று கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Summary

Restrictions have been imposed on horse riding across Tamil Nadu due to the spread of the Glanders infection.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.