பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

திரைத் துறை கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதி! தயாரிப்பாளர் சங்கம்

திரைத் துறை கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் சி. ஜோசப் விஜய் உறுதி அளித்துள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

News image

முதல்வரை சந்தித்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் - டிஐபிஆர்

Updated On :18 மே 2026, 10:07 pm IST

திரைத் துறை கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் சி. ஜோசப் விஜய் உறுதி அளித்துள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று (மே 18) தெரிவித்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இன்று சட்டப்பேரவைக்குச் சென்று, திரைத் துறையில் இருந்து முதல்வராக பொறுப்பேற்றுள்ள முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர். இத்துடன் திரைத் துறையின் கோரிக்கைகளை மனுவாக முதல்வர் விஜய்யிடம் வழங்கினர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட விஜய், அதனைப் படித்துப் பார்த்து கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவதாக உறுதி அளித்தார்.

முதல்வர் விஜய் உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுடன் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பேசியதாவது:

''எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் திரைத் துறையில் இருந்து முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் விஜய். அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தோம். எங்களை அன்புடன் வரவேற்று எங்கள் கோரிக்கைகளைக் கேட்டார்.

நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். திரைத் துறையில் உள்ள சிக்கல்கள் முதல்வருக்கும் தெரியும் என்பதால், விரைவில் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்.

நாங்கள் கொடுத்த மனுவை அவரே படித்துப் பார்த்து, கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்'' எனக் குறிப்பிட்டனர்.

Summary

Chief Minister Assures Fulfillment of Film Industry Demands Producers' Council

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.