தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்

செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தது குறித்து...

News image

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் - படம்: விடியோ கிளிப்

Updated On :6 மணி நேரங்கள் முன்பு

அதிமுகவுடன் கூட்டணியமைக்க கடைசி நிமிடம் வரை தவெக தயாராக இருந்ததாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் கட்சிப் பதவிகளை நீக்கி, 17 மாவட்டங்களுக்கான புதிய செயலாளர்களை எடப்பாடி கே. பழனிசாமி நியமித்தார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான அணியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

”அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வீடுதேடி வந்த தலைவர்களை நீங்கள் தேவையில்லை, நான் வெற்றி பெறுவேன். 210 தொகுதிகளில் வெற்றி பெறுவேன் என்று சொல்லி, கூட்டணிக்கு வந்த தலைவர்களை விரட்டியடித்த தலைமையை இன்று நாம் பெற்றுள்ளோம்.

அவர்களையெல்லாம் நாம் அரவணைத்து இருந்தால் நாம் வெற்றி பெற்று இருக்கலாம். அதிமுகவுடன் தவெக கூட்டணியமைக்க தயாராக இருந்தபோதும், நாங்களும் கூட்டணி அமைக்கலாம், மிகப்பெரிய வெற்றி பெறலாம் என்று கூறியபோது, எல்லாம் எனக்குத் தெரியும், நான் பார்த்துக் கொள்கிறேன், அவர்கள் வேண்டாம் என்று இபிஎஸ் கூறினார்.

அதிமுக செயற்குழு கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடுக்கப்பட்ட முடிவு. மக்களவைத் தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக முடிவு எடுத்தார். பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தை இன்று வரை சொல்லவில்லை.

யாரையெல்லாம் கட்சியில் இருந்து இபிஎஸ் நீக்கினாரோ அவர்கள் அனைவரும் எம்.எல்.ஏ. ஆகிவிட்டனர். தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் கொடுக்காததால், அவர்கள் கூட்டணியில் இருந்து விலகினார்கள்” என்றார்.

Summary

Former Minister C.V. Shanmugam has stated that the TVK was prepared to form an alliance with the AIADMK until the very last minute.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.