தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பெரும்பான்மையை நிரூபிக்க அசிங்கமான அரசியல் செய்த தவெக! -டிடிவி தினகரன்

தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை கிடைத்ததைச் சுட்டிக்காட்டி டிடிவி தினகரன் கண்டனம்

News image

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் - PTI

Updated On :5 மணி நேரங்கள் முன்பு

சட்டப்பேரவையில் தங்கள் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க, ஜனநாயக மாண்புகளை மீறி அசிங்கமான அரசியலை தவெக செய்ததாக அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமமுக கட்சி சார்பில் வேட்பாளராக மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஆர். காமராஜ் எம்எல்ஏவாகப் பதவியேற்ற நிலையில், அவர் தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உடன் கைகோப்பதாக ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து, அவர் அமமுகவில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, இன்று (மே 13) சட்டப்பேரவையில் தவெக அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர்களுக்கு தேவைக்கும் அதிகமான பெரும்பான்மை கிடைத்தது.

இதனைச் சுட்டிக்காட்டி டிடிவி தினகரன் இன்று (மே 13) இரவில் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தூயசக்தி என்று சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்த த.வெ.க., ஜனநாயக மாண்புகளை மீறி குதிரை பேரம் நடத்தி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கிய துர்நாற்ற அரசியலை நான் பொதுவெளியில் அம்பலப்படுத்தி இருந்தேன்.

த.வெ.க.வின் இந்த அவமானகரமான செயலை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கொண்டுசெல்லும் வகையில், சட்டப்பேரவையிலேயே இதுபற்றி விரிவாகப் பேசி இந்த அரசின் குதிரைபேர, மோசடி அரசியலை மேலும் அம்பலப்படுத்தி, கண்டித்த அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல, தங்கள் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க.வினர் செய்த அசிங்க அரசியலைக் கண்டித்துக் குரல் கொடுத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

த.வெ.க.வின் இந்த தரம் கெட்ட அரசியல் இனியும் தொடர்ந்தால், ஜனநாயகத்தைக் காக்க, அவர்களை மக்கள் முன்னால் தொடர்ந்து முழுமையாக அம்பலப்படுத்துவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.