தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தஞ்சையில் உள்ள அதிராம்பட்டினத்தில் 71 மி.மீ., மழை பெய்துள்ளது.
வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்காக பரவலாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் நடைபெற்று வரும் நிலையில், வெயிலால் கடும் சிரமத்திற்குள்ளாகும் மக்களுக்கு இந்த மழை பெரும் ஆறுதல் அளிக்கிறது.
அந்த வகையில், கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தஞ்சையில் உள்ள அதிராம்பட்டினத்தில் 71 மி.மீ., மழை பெய்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் இன்று(மே 11) 5.30 வரை பெய்த மழையளவு மில்லிமீட்டரில் பின்வருமாறு:
அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 71.0
பாம்பன் (ராமநாதபுரம்) 7.0
சேலம் (சேலம்) 1.0
தூத்துக்குடி (தூத்துக்குடி) 0.5
மீனம்பாக்கம் (சென்னை) 0.4
கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 0.2
துவாக்குடி_இஸ்ரோ (திருச்சிராப்பள்ளி) - 25.0
நெய்யூர் (கன்னியாகுமரி) - 18.5
ஓசூர் (கிருஷ்ணகிரி) - 0.5
எச்ஆர்எஸ் பேச்சிப்பாறை (பேச்சிப்பாறை) - 27.5
ராம்நாடு கேவிகே (ராமநாதபுரம்) - 1.0
தனுவாஸ் மாதவரம் (சென்னை) - 0.5
கமுதி (ராமநாதபுரம்) - 7.0
ராஜபாளையம் (விருதுநகர்) - 6.0
தரமணி (சென்னை) - 0.5
நாகர்கோயில் (கன்னியாகுமரி) - 0.5
தூத்துக்குடி ரயில் நிலையம் (தூத்துக்குடி) - 0.5
ஏலகிரி_மலை (திருப்பத்தூர்) - 0.5
இதனிடையே தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும்.
ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடா? அமைச்சர் டி.கே. பிரபு விளக்கம்

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 24 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள்?

தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
