வெற்றி சான்றிதழை வீட்டிலிருந்து எடுத்து வந்து எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார் அமைச்சர் கீர்த்தனா.
17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டப்பேரவைக்குப் புதிதாகத் தேர்வான உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாகப் பதவியேற்று வருகிறார்.
முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவாகவும், அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி, எடப்பாடி தொகுதி எம்எல்ஏவாகவும், ஓ. பன்னீர்செல்வமும் போடி எம்எல்ஏவாகவும் பதவியேற்றுக் கொண்டனர். திமுக, அதிமுக, தவெகவைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் அடுத்தடுத்து பதவியேற்றுக் கொண்டனர்.
இடைக்கால அவைத் தலைவர் சோழவந்தான் கருப்பையா உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். முதலில், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாகப் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அமைச்சர்களில் இறுதியாக வந்த கீர்த்தனா, பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான வெற்றி சான்றிதழைக் கொண்டு வராததால் எம்எல்ஏவாகப் பதவியேற்க முடியவில்லை.
முதல்வர் பதவியேற்பு விழாவில் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டவர் கீர்த்தனா. இன்று காலை புதிதாகத் தேர்வான உறுப்பினர்களை பதவியேற்க ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர். அப்போது கீர்த்தனாவை பதவியேற்க அழைத்த நிலையில், அவரிடம் வெற்றிச் சான்றிதழ் இல்லாததால், அவர் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொள்ளவில்லை.
பிறகு, அவர் வீட்டிலிருந்து சான்றிதழை எடுத்துவந்து, மதியம் 1.30 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார்.
Summary
Minister Keerthana took oath as an MLA after bringing the victory certificate from home.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள்: அமைச்சர் கீர்த்தனா அழைப்பு!
தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்க 21 நாள்களில் அனுமதி: அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு!

சான்றிதழ் கொண்டு வந்து எம்எல்ஏவாக பதவியேற்றார் அமைச்சர் கீர்த்தனா!

அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன?
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

