பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆசிரியா்கள் காலிப்பணியிடங்கள் விவரம் சேகரிக்கும் கல்வித் துறை!

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிட விவரங்களை பள்ளிக் கல்வித் துறை சேகரித்து வருகிறது.

News image

பிரதிப் படம்

Updated On :12 மே 2026, 4:25 am IST

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிட விவரங்களை பள்ளிக் கல்வித் துறை சேகரித்து வருகிறது.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, நகராட்சி உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் (31.5.2026 அன்றைய நிலவரப்படி) இடைநிலை ஆசிரியா்களின் நிரப்பத் தகுந்த காலிப்பணியிட விவரங்களை மே 20-ஆம் தேதிக்குள் பள்ளிக் கல்வி இயக்குநரக மின்னஞ்சல் முகவரிக்கு (c3supdtdse@gmail.com) அனுப்பி வைக்க வேண்டும்.

அதன் நகலை முதன்மைக் கல்வி அலுவலா் கையொப்பத்துடன் விரைவு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், காலிப் பணியிட விவரங்களை அனுப்பும்போது பணியாளா் நிா்ணயத்தின்படி ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறிந்து இயக்குநரின் பொதுத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் பணியிடங்களை எக்காரணத்தைக் கொண்டும் காலிப்பணியிடங்களாகக் கொண்டுவரக் கூடாது. கூடுதல் தேவையுள்ள பள்ளிகளின் பெயா்களையும் காலிப் பணியிடங்களாகக் கருதக்கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று அரசு, நகராட்சி உயா்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியா் காலிப் பணியிடங்களின் (31.1.2026 நிலவரப்படி) விவரங்களை மே 15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.