சின்மயா மிஷன் தனது 75 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஒரு மாபெரும் ஆன்மிக சந்திப்பை நடத்தி, உலகின் பல்வேறு இந்து மரபுகளைச் சேர்ந்த மதிப்பிற்குரிய சந்நியாசிகள் மற்றும் ஆன்மிகத் தலைவர்களை ஒரே மேடையில் ஒன்று கூட்டியது. இந்த நிகழ்வு பரஸ்பர அன்பு, மரியாதை மற்றும் ஆன்மிக ஒற்றுமையின் அபூர்வ வெளிப்பாடாக அமைந்தது.

விழா மேடையில்...
இந்நிகழ்வில் சுவாமி சின்மயானந்தர் அவர்களின் மகத்தான ஆன்மிகப் பாரம்பரியத்திற்கும், சனாதன தர்மத்தை உலகளவில் பரப்பிய அவரது அரிய பங்களிப்பிற்கும் மனமார்ந்த அஞ்சலி செலுத்தப்பட்டது. சுவாமி ஷஷிஷிகானந்தர், ராமகிருஷ்ண மிஷன் சார்பில் உரையாற்றுகையில், “குருதேவ் சுவாமி சின்மயானந்தர் இரண்டாவது விவேகானந்தர்” என்று புகழாரம் சூட்டினார்.
சுவாமி அம்ரித ஸ்வரூபானந்தர், மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் உரையாற்றியபோது, ''சுவாமி சின்மயானந்தரின் தேசப்பற்று வெறும் உணர்ச்சியால் அல்ல, உலகுக்கு பாரதம் அளிக்கும் ஆன்மிகப் பார்வையின் ஆழமான புரிதலால் உருவானது'' என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மது பண்டிட் தாஸ் பேசுகையில், இஸ்கான் நிறுவனர் ஏ.சி. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரோடு தொடர்புடைய ஒரு முக்கிய சம்பவத்தை பகிர்ந்துகொண்டார். இஸ்கானின் வெளிநாட்டு பக்தர்கள் குருவாயூர் கோவில் மற்றும் பத்மநாபசுவாமி கோவில் ஆகிய கோவில்களில் அனுமதி பெறுவதற்காக, ஸ்ரீல பிரபுபாதர், சுவாமி சின்மயானந்தர் ஒரு கடிதம் கொடுத்தால் இந்த கோவில்களில் வெளிநாட்டு பக்தர்களுக்கு அனுமதி கிடைக்கும் என்றும், சனாதன தர்மத்தின் அனைவர் சேர்க்கைச் சிந்தனையை வலியுறுத்திய குருதேவர் (சுவாமி சின்மயானந்தர்), இஸ்கான் பக்தர்கள் “உறுதியான இந்துக்கள்” என்று குறிப்பிட்டு கடிதம் கொடுத்ததாகவும், அவரின் வேண்டுகோளைத் தொடர்ந்து கோவில் நிர்வாகங்கள் அனுமதி வழங்கின என்றும் கூறினார்.
மேலும், சுவாமி அவதேஷானந்த கிரி, சுவாமி சின்மயானந்தரை “ஆதி சங்கராசார்யரின் ஞான ஹம்ச அவதாரம்” என்று வர்ணித்து, உலகம் முழுவதும் இந்து சமுதாயத்தை ஒன்றிணைத்த அவரின் ஆன்மிகப் பெரும்பணியைப் பாராட்டினார்.
Summary
Chinmaya Mission's Spiritual Gathering
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டி-மார்ட் 4வது காலாண்டு நிகர லாபம் 19.2% உயர்வு!

நாகையில் சின்மயா அம்ருத யாத்திரைக்கு வரவேற்பு

சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா 67வது ஆண்டு குருபூஜை விழா

சின்மயா யாத்திரை திருச்சி வருகை
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

