தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச்செயலத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு முதல்வராக இன்று பதவியேற்ற விஜய் பதவியேற்ற உடனே தலைமைச்செயலகம் சென்றார். தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் நாற்காலியில் அமர்ந்து, தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். முதல்வராகப் பொறுப்பேற்றதும், அரசு கோப்புகளிலும் அவர் கையெழுத்திட்டார். பின்னர் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், தலைமைச் செயலர் சாய் குமாருடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
முதல்வரின் ஆலோசனையில் காவல் துறை உயரதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில், தமிழ்நாட்டின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துதல், போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இவை தொடர்பாக தொடர்ச்சியாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்ற முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார். விஜய்யுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர். இதற்கிடையே, பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை சந்தித்து விஜய் வாழ்த்துப் பெற்றார்.
அப்போது முதல்வர் விஜய்க்கு பெரியார் சிலையை பரிசளித்தார் கி.வீரமணி என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Chief Minister Vijay held a consultation at the Chennai Secretariat regarding the law and order of Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய்யின் தனிச் செயலர்கள் நியமனம்
முதல்வர் விஜய் பதவியேற்பு விழா!
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்! மக்கள் ஆரவாரம்
வெற்றிச் செய்தி - கறுப்புச் சட்டம் தோற்கடிப்பு: முதல்வர் ஸ்டாலின்
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை


