தமிழ்நாட்டின் முதல்வர் நாற்காலிக்கு மிக அருகிலும், வெகு தொலைவிலும் இருக்கிறார் தவெக தலைவர் விஜய் என்று சொல்லுமளவுக்கு நிலைமை மாறிக்கொண்டேயிருக்கிறது. இந்நிலையில், இன்று இரவு 7 மணிக்கு தமிழக ஆளுநர் அர்லேகர் திருவனந்தபுரம் புறப்படுகிறார் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்று இரவு முடிவுகள் வெளியாகின. மறுநாள், கேரளத்தில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தார் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்.
தமிழ்நாட்டில் மே 7ஆம் தேதி விஜய், முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் அன்று இரவே சென்னையில் இருந்து புறப்பட்டு கேரளம் திரும்பவும் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
ஆனால், தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்ததால், மே 7ஆம் தேதி தமிழக ஆளுநர் அர்லேகர், கேரள பயணம் ரத்து செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.
அடுத்தடுத்த நாள்களில் விஜய் ஆளுநர் மாளிகை சென்று ஆதரவு கடிதங்களை அளித்து முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே விஞ்சியது. இதோ மே 9ஆம் தேதி வரை விஜய் முதல்வராவதற்கான வழிமுறைகள் காணப்படவில்லை.
விசிக தன்னுடைய நிலைப்பாடு குறித்து மாலை 4 மணிக்கு தெரிவிப்பதாகக் கூறி அனைவரையும் மணி பார்க்க வைத்துவிட்டது.
ஒருபக்கம் விசிக ஆதரவு கடிதம் அளித்தாலும் அதனை கொண்டுபோய் கொடுக்க ஆளுநர் அர்லேகர், ஆளுநர் மாளிகையில் இருக்க மாட்டாரோ என்று சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், அவர் இன்று மாலை 7 மணிக்கு திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாவிட்டாலும், அவர் சென்னையிலிருந்து கேரளம் திரும்ப வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது.
அடுத்து என்ன நடக்கும் என்று திக் திக் நிமிடங்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த செய்தி தவெகவினருக்கு சற்று அதிர்ச்சியை அளிக்கலாம். இது உண்மையில்லாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது.
Summary
As the process of forming a new government in Tamil Nadu continues, reports are emerging that the Governor is heading to Thiruvananthapuram.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுக

பெரும்பான்மை இல்லாமல் தவெகவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது : ஆளுநர் அர்லேகர்

113 பேருடன் எப்படி ஆட்சி அமைப்பீர்கள்? ஆளுநரின் கேள்விகளுக்கு விஜய் விளக்கம்!

ஆடு, புலி, புல்லுக்கட்டு சவால்...
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
