தமிழ்நாட்டில் தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் தவெக, ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையைப் பெற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ஆளுநர் விஜய்யை ஆட்சியமைக்க அழைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு விஜய் நேற்று ஆளுநரை சந்தித்திருந்த நிலையில், ஆளுநர் அழைப்பு விடுக்காததால், இன்று காலை மீண்டும் ஆளுநர் இல்லம் சென்று விஜய் சந்தித்து அவரது சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்து திரும்பியிருக்கிறார்.
அடுத்து என்ன நடக்கும்? ஆளுநர் அர்லேகர், விஜய்யை ஆட்சியமைக்க அழைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துளள்து.
இதற்கிடையே, மற்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நேற்று அரசியல் களமே சுறுசுறுப்பாக இருந்த நிலையில், இன்று அதே காட்சிகள் மந்தகதியில் நடப்பதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. 118 இடங்கள் தேவை என்றபட்சத்தில் 108 இடங்களுடன் தவெக போராடி வருகிறது. பல கட்சிகள் முன் வருவது போல இருந்தாலும் எதுவும் பலனளிக்கவில்லை.
இந்த நிலையில்தான் தொங்குப் பேரவை என்பது பற்றி பலரும் விவாதித்து வருகிறார்கள்.
தொங்குப் பேரவை என்றால் பேரவையில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை எந்த கட்சியும் பெறாமல், குறைந்த பெரும்பான்மை பெற்ற கட்சிகளுக்கு மற்ற கட்சிகள் ஆதரவு அளிக்காத நிலையில் தொங்கு பேரவை அமையும் வாய்ப்பு உண்டு.
தொங்கு பேரவை என்பது, முதலில் அதிக இடங்களில் வென்ற கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பார். அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் வழங்கப்படும்.
அதற்குள் மற்ற கட்சிகளின் ஆதரவை பெற வேண்டும். வெளியில் இருந்து ஆதரவு, ஆட்சியில் அதிகாரம் போன்றவகைகளில் இந்த ஆதரவு அமையலாம். பிறகு பேரவையில் ஆட்சியமைக்கத தேவையான பெரும்பான்மையை கட்சி நிரூபிக்கும்.
பெரும்பான்மை நிரூபிக்கப்படாமல் போனால், தேர்தலைத் தவிர்ப்பதற்காக, அடுத்த நிலையில் இருக்கும் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுக்கலாம். அந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும்.
இந்த நிலையில், தொங்கு பேரவை என்பதால், அந்த மாநிலத்தில் மீண்டும் தேர்தல் நடத்தப்படலாம்.
ஆனால், தமிழகத்தில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் பேச்சுவார்த்தை நடத்தி மற்ற கட்சிகளின் ஆதவை பெற்று ஆட்சியமைக்கப்பட்டிருக்கிறதே தவிர, மீண்டும் தேர்தல் நடக்கும் நிலை ஏற்படவில்லை.
1952ஆம் ஆண்டு 375 தொகுதிகளைக் கொண்ட பேரவையில் 188 பெற்றால் மட்டுமே பெரும்பான்மை என்ற நிலையில் காங்கிரஸ் 152 இடங்களில் வென்று, பிறகு மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
2006ஆம் ஆண்டு கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட திமுக 96 இடங்களில் வென்றது. ஆனால், கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பெரும்பான்மை இருந்ததால் நல்லபடியாக 5 ஆண்டுகள் ஆட்சி நடந்தது.
இப்போது என்னவாகும்?
2026 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தவெக 108 இடங்களில் வென்றிருப்பதால், ஆட்சியமைப்பதில் பெரிய அளவில் சிக்கல் இருக்காது என்றே கூறப்படுகிறது. ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்று ஏற்கனவே விஜய் கூறியிருந்ததால், நிச்சயம் ஒரு சில கட்சிகள் ஆதரவு கரம் நீட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
How will a hung assembly be formed? Has this happened in Tamil Nadu before? About..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெரும்பான்மையை பேரவையில்தான் நிரூபிக்க வேண்டும், ஆளுநர் மாளிகை அல்ல! காங்கிரஸ்

பெரும்பான்மை இல்லாமல் தவெகவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது : ஆளுநர் அர்லேகர்

பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி?

கல்வராயன்மலை படகு குழாமை சீரமைக்க வேண்டும்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு


