தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை மே 4 காலை 8 மணிக்குத் தொடங்கி நள்ளிரவையும் கடந்து நீடித்தது. 234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிந்து அதிகாரபூர்வமாக முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியில் இருந்த திமுக கூட்டணி, 73 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக 59, காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தலா 2, தேமுதிக 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.
234 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால், அதிகமாக 108 இடங்களில் வென்றுள்ள தவெக ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது. முதல்முறை தேர்தலை எதிர்கொண்ட தவெக 34.92% வாக்குகளைப் பெற்றுள்ளது.
அதிமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது 21.21% வாக்குகளாகும். இக்கூட்டணியில் இடம்பெற்ற பாமக 4, பாஜக 1, அமமுக 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
முதல்முறை தேர்தலை சந்தித்துள்ள தவெக 34.92% வாக்குகளைப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக திமுக 24.19% வாக்குகளைப் பெற்றுள்ளது.
அதிமுக 21.21%, நாம் தமிழர் கட்சி 4%, பாஜக 2.97%, தேமுதிக 1.20%, விசிக 1.09%, வாக்குகளைப் பெற்றுள்ளது.
Summary
Vote counting has concluded in Tamil Nadu! TVK wins 108 seats; DMK wins 59
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக ஒரு 'சீட்' கூட பெறாத 8 மாவட்டங்கள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் திமுக வெற்றி

கேரளத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது! காங்கிரஸ் 63, சிபிஎம் 26 இடங்களில் வெற்றி!

விசில் புரட்சி நடக்கும்; 200+ இடங்களில் தவெக வெல்லும்! செங்கோட்டையன்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

