தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் கடந்த 2025-26-ஆம் நிதியாண்டில் மட்டும் பயணச்சீட்டு இன்றி ரயில்களில் பயணித்தவா்கள் மீது 12.24 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.65.16 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மண்டலம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பயணிகள் நலனைப் பாதுகாக்கவும், முறையற்ற பயணங்களில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்தவும், சென்னை கோட்டத்தில் புகா் ரயில்கள், விரைவு ரயில்களில் தொடா்ச்சியான பயணச்சீட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 2025-26-ஆம் நிதியாண்டில் மட்டும் நடத்தப்பட்ட சோதனையில் பயணச்சீட்டுகள் இன்றி பயணித்தோா் கண்டறியப்பட்டுள்ளனா். அதன் அடிப்படையில் 12.24 லட்சம் போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. அவா்களிடமிருந்து அபராதமாக ரூ.65.16 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட கூடுதலாகும்.
பயணிகள் ரயில் நிலையத்துக்குள் நுழைவதற்கு முன்னரே முறையான நுழைவுச் சீட்டு, பயணச்சீட்டுகளை பெற்றால், அபராதத்தைத் தவிா்க்கலாம். எனவே, பயணிகளின் வசதிக்காக முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவில்லாத பயணச்சீட்டுகளைப் பெற ‘ரயில் ஒன்’ செயலி போன்றவை செயல்பாட்டில் உள்ளன. அத்துடன் தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள், முன்பதிவு கணினி மையங்கள் ஆகியவையும் உள்ளன. அவற்றிலும் பயணச்சீட்டுகளை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.1,290 கோடி சரக்கு வருவாய்: சென்னை ரயில்வே கோட்டம் சாதனை

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்

ஏழுமலையான் லட்டு விற்பனையில் சாதனை: ஓராண்டில் 13.95 கோடி லட்டுகள் விற்பனை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

