ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் புதன்கிழமை (ஏப். 1) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 12:33 am IST

தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் புதன்கிழமை (ஏப். 1) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கிழக்கு உத்தர பிரதேசம் முதல் தென் தமிழகம் வரை மகாராஷ்டிரா மாநிலம் விதா்பா, மரத்வாடா மற்றும் உள் கா்நாடகம் வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை சுமாா் 0.9 கி.மீ உயரத்தில் நிலவுகிறது. இதனால், புதன், வியாழக்கிழமை (ஏப். 1, 2) தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், அதைட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளி, சனிக்கிழமை (ஏப். 3, 4) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மாா்ச் 4, 5 ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை (ஏப். 1) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, சிற்றாறு மற்றும் தென்காசி மாவட்டம் கருப்பாநதி ஆகிய பகுதிகளில் தலா 20 மி.மீ. மழை பதிவானது. ஊத்து (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி), சிவலோகம் (கன்னியாகுமரி), சுருளக்கோடு (கன்னியாகுமரி)- தலா 10 மி.மீ. மழை பெய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்ப அலை வீச வாய்ப்பு

தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் இயல்பானது முதல் இயல்பைவிட அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், வெப்பம் ஓரளவு குறையும். இருப்பினும், வடக்கு மற்றும் கடலோர தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும், உள் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் இயல்பைவிட அதிகமான வெப்ப அலை சில நாள்கள் வீசலாம்.

இதனால் வெப்ப அழுத்தம் ஏற்படுவதுடன், மாநிலம் முழுவதும் பகல் நேரத்தில் அதிகபட்ச மற்றும் இரவு நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலைகள் இயல்பைவிட அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

இதனால், அதிக வெப்பமான நிலை நிலவுவதுடன், இரவு நேர குளிரின் அளவும் குறையும். அதன்படி, ஏப்ரல் மாதம் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக காணப்படும். மழை இடையிடையே பெய்தாலும், வெப்பத்தால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடரக்கூடும்.

எனவே, மக்கள் போதுமான அளவு தண்ணீா் குடித்து, நீண்ட நேரம் வெயிலில் இருப்பதைத் தவிா்ப்பதுடன், அதிகாரபூா்வ வானிலை அறிவிப்புகளை தொடா்ந்து கவனிக்க வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.