தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு!

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு...

News image

திருச்செங்கோடு வேட்பாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் / பொள்ளாச்சி வேட்பாளர் கே. நித்தியானந்தன் - X

Updated On :28 மார்ச் 2026, 8:43 pm IST

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக 164 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகின்றது. மேலும், கூட்டணிக் கட்சிகள் 11 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடுகின்றன.

இதில், மதிமுக 3 தொகுதிகளிலும், கொங்கு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை தலா 2 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் முக்குலத்தோர் புலிப்படை, மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ, தமிழர் தேசம் கட்சி ஆகியவை தலா 1 தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

திமுக வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

இதில், கொங்கு மக்கள் தேசிய கட்சி சார்பில் திருச்செங்கோடு தொகுதியில் ஈ.ஆர். ஈஸ்வரன் மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் கே. நித்தியானந்தன் ஆகியோர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரான ஈ.ஆர். ஈஸ்வரன் கடந்த தேர்தலிலும் திமுக சார்பில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Kongunadu Makkal Desiya Katchi Candidates Announced

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.