திமுக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை என்றும் கூட்டணி கட்சிகளிடையே கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தவே இந்த கால தாமதம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறியுள்ளார்.
திமுக தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவுடன் தொகுதிகள் குறித்து பேசிய பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய பெ. சண்முகம்,
"கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியலை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். 234 தொகுதிகள் நிலவரமும் இன்று மாலை தெரிய வரும்.
திமுக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. திமுக கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதாலும் ஒரே தொகுதியை பல கட்சிகள் கேட்பதாலும் கால தாமதம் ஏற்படுகிறது. கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தவே இந்த கால தாமதம். கட்சிகளுக்குள் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தும்பொருட்டு விவாதம் நடைபெற்றது. கூட்டணி கட்சிகளுக்குள் ஒற்றுமை இருக்கிறது. அதனால்தான் பேசி முடிவெடுத்திருக்கிறோம். கண்டிப்பாக திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும்.
234 தொகுதிப் பட்டியலை முதல்வர் தயார் செய்து வருகிறார். ஒரு சில தொகுதிகள் தொடர்பாக இன்னும் சில மணி நேரத்தில் இறுதி செய்யப்பட உள்ளது. இன்று மாலை முழு தொகுதிப் பட்டியல் வெளியாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில் நிச்சயம் 100% வெற்றி பெறுவோம்" என்றார்.
திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறித்த அறிவிப்பு நேற்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று வெளியாகிறது.
Summary
DMK alliance Constituency list to be released this evening: CPM Shanmugam
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காங்கிரஸ் உறவு முறிவு; நாடாளுமன்றத்தில் திமுக தனித்து அமரும்! - கனிமொழி கடிதம்

திமுக - அதிமுக ஒன்றிணைந்தால் பேரழிவு... நடிகர் விஷால் கருத்து!

இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!

காங்கிரஸின் அடிமை திமுக, அதனால்தான் கூடுதல் தொகுதி: அண்ணாமலை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


