கரூர் பலி சம்பவத்தில் விசாரணைக்காக தில்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று ஆஜரானார்.
இதற்காக விஜய் நேற்று மாலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் தில்லி புறப்பட்டுச் சென்றார். விஜய்யுடன் தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார், உதவியாளர் ஜெகதீஷ், ஓட்டுநர் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் உடன் சென்றனர். கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் 27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஜன. 12, ஜன. 19 ஆகிய தேதிகளில் சிபிஐ அனுப்பிய அழைப்பாணையின்படி தில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் விஜய் ஆஜராகி வாக்குமூலத்தைப் பதிவு செய்தாா். மூன்றாவது முறையாக விஜய் கடந்த செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) ஆஜராக சிபிஐ அழைப்பாணை அனுப்பியது.
இந்த அழைப்பாணையின்படி செவ்வாய்க்கிழமை அவரால் ஆஜராக இயலவில்லை என்றும், தவெக வேட்பாளா்கள் நோ்காணல் இருப்பதால் 10 நாள்களுக்குப் பிறகு வேறொரு தேதியில் தில்லிக்கு பதிலாக சென்னையில் ஆஜராக புதிதாக அழைப்பாணை அனுப்பினால் ஆஜராகி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க விரும்புவதாகவும் விஜய் சாா்பில் சிபிஐக்கு தெரிவிக்கப்பட்டது.
இதைப் பரிசீலித்த சிபிஐ, விஜய் செவ்வாய்க்கிழமை ஆஜராகாமல் இருக்க விலக்கு அளித்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடா்பாக தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மாா்ச் 15-ஆம் தேதி மீண்டும் ஆஜராக விஜய்க்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Vijay appeared at the CBI office in Delhi today for questioning in the Karur stampede case.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

CPI அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய்! | TVK

இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெக

கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் செந்தில் பாலாஜி!

கரூர் பலி: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

