இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பிரபலமான தேவா - ஜீவா சகோதரர்களைச் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள விடியோ பலரின் இதயங்களையும் வென்றிருக்கிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாத்திப்பட்டைச் சேர்ந்தவர்கள் இன்ஸ்டா பிரபலமான சிறுவர்கள் தேவா, ஜீவா. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாக் வித் தேவா என்ற ஐடியில், “ஹாய் காய்ஸ் நான் உங்கள் தேவா...” எனக் கூறி விடியோ வெளியிட்டு பல்வேறு கருத்துகளையும், பாடல்களையும் பாடியுள்ள இவர்கள் இணையத்தில் மிகவும் பிரபலம். ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் வரும் “அலப்பற கெளப்புறம்...” பாடல் பாடிய பின்னர் இணைத்தில் மிக வேகமாக பிரபலமாகினர்.
பிரபு தேவா, சாய் அபயங்கர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து விடியோ வெளியிட்டு வரும் தேவா மற்றும் ஜீவா, கல்வி தொடர்பாகவும் விடியோவில் பேசுவது படிப்பு மட்டும்தான் நம்மை உயர்த்தும் என்று கூறியும் விடியோ வெளியிட்டிருந்தனர். மேலும், அனிருத்துக்கு ஜீவா தான் போட்டியா... எனக் கூறி, பியானோவில் இசையமைக்கும் விடியோவையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின், ‘வைப் வித் ஸ்டாலின்’ நிகழ்ச்சி மூலம் இளம் தலைமுறையினை சந்தித்து தன்னுடைய வாழ்க்கை மற்றும் அரசியல் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் கலக்கிவரும் சகோதரர்கள் ஜீவா மற்றும் தேவாவை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுடன் இருக்கும் விடியோ ஒன்றையும் தனது அதிகாரபூர்வ பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த விடியோவில், நீங்கள் எல்லா விடியோவிலும் அனைவரையும் படிங்க.. படிங்க.. என்று சொல்றீங்க.. அதனால்தான், உங்களை இங்கு அழைத்திருக்கிறேன் என்றார் முதல்வர் ஸ்டாலின். அதற்கு, தேவாவும் ஜீவாவும், வருங்காலத்தில் ஆட்சியராகவும், காவல்துறை அதிகாரியாகவும் வரவேண்டும் எனத் தெரிவித்தனர். ஆட்சியராகவும், காவல்துறை அதிகாரியாகவும் அடிக்கடி கோட்டைக்கு வர வேண்டும்; ஆனால், நீங்கள் அதற்கு முன்னதாகவே கோட்டைக்கு வந்து விட்டனர் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து, படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க...என அறிவுரை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தொகுதி மறுவரையறை; தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்! மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!!
இங்க பாரு... இணையத்தைக் கலக்கும் அஜித் - ஷாலினி பிரியாணி விடியோ!
விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை


