இந்தித் திணிப்புக்கு எதிராக ரயில் முன் பாய்ந்து போராட முயன்றதில் பலத்த காயமடைந்த சிவா திலீபனை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தாய்த்தமிழைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே...
உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும்; உயிரை அல்ல! இந்தித் திணிப்புக்கு எதிராக மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தில், யாரும் எதிர்பாராத நிலையில் உணர்ச்சிப் பெருக்கால் ரயில் முன் பாய்ந்து, பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிவா திலீபனையும், உடனிருக்கும் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருஜாவையும் சந்தித்து ஆறுதல் கூறினேன்.

சிவா திலீபன் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின் - X | CM Stalin
அப்போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் சிவா திலீபன் நலம்பெற வேண்டும் எண்ணமும், “பிள்ளைகளைப் பலிகொடுக்கவா இயக்கம் நடத்துகிறோம்” என்று மொழிப்போரின்போது பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதும் ஒருசேர என்னுள் எழுந்தது.
இருந்து போராட வேண்டும்; அதன் பயனை நாம் இருந்து காண வேண்டும்! தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அரசியல் களத்தில் ஒற்றுமையுடன் முறியடிப்போம். உணர்ச்சிகள் நம் அறிவாற்றலை ஆட்கொள்ள விடாமல், சிந்தித்துச் செயல்படுவோம்!
எனவே, நமது போராட்ட நோக்கம் சரியானதாக இருந்தாலும், உணர்ச்சிவயப்பட்டு இதுபோன்ற செயல்களை யாரும் செய்யக் கூடாது என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தித் திணிப்புக்கு எதிராக மே 17 இயக்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சிவா திலீபன், சென்னை பார்க் ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து போராட முற்பட்டார்.
ரயில் முன் பாய்ந்ததில் சிவா திலீபன் பலத்த காயமடைந்தததால், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Summary
"Dedicate your efforts, not your lives, against the imposition of Hindi"—Chief Minister Stalin appeals to the youth.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மழையால் ரயில் நிலையம் முன் தேங்கிய மழைநீர்! பயணிகள் அவதி!
இபிஎஸ், டி.டி.வி. தினகரன், அன்புமணி இணைந்திருப்பது ஆட்சியமைக்க அல்ல: உதயநிதி
நாற்காலிக்கு அடியில் ஊர்ந்துவந்தவர் அல்ல ஸ்டாலின்: சேகர்பாபு கடும் எச்சரிக்கை
இந்தித் திணிப்புக்கு எதிராக போராடிய சிவா திலீபன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


