ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேரின் ஜாமீனை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரௌடி நாகேந்திரன் அவரது மகன் அஸ்வத்தாமன் உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர். இருவர் தலைமறைவாக உள்ளனர். வழக்கின் முக்கிய குற்றவாளியான நாகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இந்த வழக்கை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இதனிடையே இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 14 பேருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பிணை வழங்கியது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே கோரிக்கையுடன், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ள 14 பேரில், அஞ்சலை மற்றும் ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடி தவிர்த்து, 12 பேரின் பிணை உத்தரவை ரத்து செய்யப்பட்டது. பிணை ரத்து செய்யப்பட்ட 12 பேரும் கடந்த மார்ச் 6-ஆம் தேதி நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, சரண் அடைவதற்கு 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என அவர்கள் கூறியிருந்த நிலையில், கால அவகாசத்தை மார்ச் 13-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதனிடையே, பிணை உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று(மார்ச் 12) விசாரணைக்கு வந்த நிலையில், அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேரின் ஜாமீனை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு ஒரு வாரத்தில் பதில்மனு தாக்கல் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், வழக்கின் விசாரணை ஏப்ரல் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Summary
The Supreme Court has issued an interim stay on the High Court order cancelling the bail of 12 people, including Aswatthaman, arrested in the Armstrong murder case.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமலாக்கத் துறையின் வழக்கில் அல்-பலாஹ் தலைவருக்கு பிணை மறுப்பு: தில்லி நீதிமன்றம் உத்தரவு

தில்லி கலவர வழக்கு: காவல்துறையின் மேல்முறையீடு தள்ளுபடி

இளநீா் வியாபாரி கொலை வழக்கில் இளைஞருக்கு 3 ஆயுள் தண்டனை: கரூா் நீதிமன்றம் தீா்ப்பு

பணமோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு பிணை: தில்லி நீதிமன்றம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


