லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தஞ்சை பெரியகோயிலில் பெருவுடையார் - பெரியநாயகி திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் பெருவுடையார் - பெரியநாயகி திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது தொடர்பாக...

The celestial wedding ceremony of Lord Peruvudaiyar and Goddess Periyanayaki

தஞ்சை பெரியகோயிலில் பெருவுடையார் - பெரியநாயகி திருக்கல்யாண வைபவம் - டிஎன்எஸ்

Published On :29 ஜூன் 2026, 9:16 am IST

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் பெருவுடையார் - பெரியநாயகி திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.‌

வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியங்கள் இசைக்க நடைபெற்ற திருக்கல்யாண வைபோகத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. தமிழர்களின் கட்டடக்கலைக்கும் - சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் சதுர்த்தசி திதியில் பெருவுடையார் - பெரியநாயகிக்குத் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம்.

இதுபோல நிகழாண்டு திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. பெரியக்கோயில் வடக்கு பிரகாரத்தில் பெருவுடையார் - பெரியநாயகி தனித்தனியாக எழுந்தருளினர்.

இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தர்கள் பழங்கள், பூக்கள், மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு, வளையல், கண்ணாடி, ரிப்பன், வெற்றிலை, பாக்கு போன்ற உள்ளிட்ட பல வகையான பொருள்களை சீர் வரிசையாக எடுத்து வந்தனர்.

இதையடுத்து, நலுங்கு வைத்தல், மாப்பிள்ளை அழைப்பு, ஊஞ்சல் உற்சவம், மாலை மாற்றுதல், ஹோமம் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்யங்கள் இசைக்க பெரியநாயகி அம்மனுக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, பெரியநாயகி சமேத பெருவுடையார் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.

இதில், திருமணம் நடைபெறாத இளைஞர்களுக்குப் பெரியநாயகி அம்மனுக்கு சாத்தப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டது. விழா முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Summary

The celestial wedding ceremony of Lord Peruvudaiyar and Goddess Periyanayaki at the Thanjavur Big Temple was a grand and festive affair

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.