முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.40 லட்சம் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், திமுகவின் சட்டப்பேரவை கொறடாவுமான எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீடு, திருவண்ணாமலையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதிலும் சென்னையில் 4 இடங்களிலும், திருவண்ணாமலையில் 4 இடங்களிலும், கரூரில் 7 இடங்களிலும், திண்டுக்கல்லில் 2 இடங்களிலும், கோயமுத்தூரில் 2 இடங்களிலும், திருப்பூரில் 1 இடத்திலும் என மொத்தம் 13 இடங்களில் இந்தச் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் முன்னாள் அமைச்சர் திரு.எ.வ.வேலு, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் அவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் ஒப்பந்தகாரரின் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனையில், 2022 ஆம் ஆண்டு சாலை விரிவாக்கம் தொடர்பாக சங்கரானந்த் இன்ப்ரா நிறுவனத்திற்கான டென்டரில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
2006 முதல் 2011 வரை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக எ.வ. வேலு மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த சோதனையில் நெடுஞ்சாலைத்துறை சார்ந்த ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும், சோதனையின் போது கணக்கில் வராத ரூ.40 லட்சம் சிக்கியதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
பணப்பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகே முழுமையானத் தகவல்கள் தெரியவரும். இத்துடன் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Summary
unaccounted cash amounting to ₹40 lakh was seized during raids conducted by the Directorate of Vigilance and Anti-Corruption at 20 locations linked to former Minister E.V. Velu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆளுங்கட்சி மிரட்டலுக்கு அஞ்சும் இயக்கம் திமுக அல்ல: மு.க. ஸ்டாலின்
திருப்பூா் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல்

கோவை மத்திய ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

சூளகிரி பத்திரப் பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 1.50 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |
தினமணி செய்திச் சேவை

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்
தினமணி செய்திச் சேவை

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK
தினமணி செய்திச் சேவை
