திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர உத்தரவு!

கன்னிகைப்பேர் கிராமத்தில் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவால் 7 பேர் பலியாகினர். இது தொடர்பாக 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது குறித்து..

News image

அம்மோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை, மருத்துவமனை வாயிலில் குவிந்த உறவினர்கள் - DNS

Updated On :1 மணி நேரம் முன்பு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அம்மோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பான விரிவான விசாரணைக்காக 3 பேர் கொண்ட சிறப்புக் குழுவையும் முதல்வர் அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இரவு, பகல் என இரண்டு ஷிப்ட்களில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதனிடையே, இன்று காலை சுமார் 120 பேர் பணியில் இருந்த போது திடீரென அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில், இந்த வாயுவை சுவாசித்த தொழிலாளர்காள் மயக்கம் அடைந்தனர். உடனே அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மேலும் சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தொழிலாளர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அமோனியா வாயு நேரடியாக உடலுக்குள் சென்றதால் நுரையீரல் வீங்கி கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அம்மோனியா வாயு கசிவு விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், 24 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Thiruvallur Ammonia leak incident Order issued to submit a report within 24 hours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.