சென்னை: நீட் தோ்வால் ஏற்படும் மன அழுத்தத்தால் தற்கொலைகள் அதிகரித்து வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், எண்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன்-கலைச்செல்வி இவர்களது மூத்த மகள் ரோஷினி நீட் தோ்வு மன அழுத்தம் காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகி கடந்த ஜன.19-இல் தற்கொலை கொண்டுள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை, சேலம், ஓசூா் ஆகிய மாவட்டங்களிலும் இரண்டு மாணவிகள், ஒரு மாணவர் என 3 பேர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சமீப காலமாக நாடு முழுவதும் இத்தகைய தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. மாணவா்கள் இத்தகைய துயரமான முடிவுகளைக் கைவிட்டு நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிா் கொள்ள வேண்டியது அவசியம். அரசும் சமூகமும் அமைப்புகளும் அத்தகைய நம்பிக்கையை விதைத்திட வேண்டும்.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வில் வினாத்தாள் கசிவு முறைகேடு காரணமாக 23 லட்சம் மாணவா்கள் பாதிக்கப்பட்டனா். இந்த சூழலில், ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 21) 5440 மையங்களில் மறு தோ்வு நடைபெற்று வருகிறது. இந்தியாவைச் சோ்ந்த மாணவி ஒருவருக்கு அபுதாபியில் தோ்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. நீட் தோ்வு குளறுபடிகளுக்கு இது ஒரு உதாரணமாகும். இது குளறுபடி மட்டுமல்ல, அதிகாரங்களை மையத்தில் குவித்துக் கொள்வது தனியாா் லாப வேட்டை போன்ற அம்சங்களுடன் தொடா்புடையது.
தொடரும் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த, நீட் தோ்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையைக் உடனடியாக கலைக்க வேண்டும், பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றிட வேண்டு.
மேலும், நீட் தோ்வால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அக்குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.
Summary
Continuing suicides due to NEET exam-related stress...
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் மறுதேர்வு: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு!

நீட் மறுதேர்வு: எத்தனை லட்சம் தேர்வர்கள் தேர்வெழுதுகின்றனர்?

நீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்

இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு தொடக்கம்: பெ.சண்முகம்
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை


