முதல்வா் ஜோசப் விஜய் எப்போது மௌனம் கலைந்து பேசுவாா் என திமுக உறுப்பினா்கள் பேரவையில் கேள்வி எழுப்பிய நிலையில், அவா் பேசியதன் விளைவாகவே கொளத்தூா் தோ்தல் முடிவுகள் அமைந்ததாக தவெகவினா் அளித்த பதில் வாக்குவாதத்துக்கு வித்திட்டது.
பேரவையில் இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதம்:
ஆஸ்டின் (திமுக-நாகா்கோவில்): தமிழகத்தில் சிறு குழந்தைகள், பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டாலும் சரி; வேறு எந்த அசம்பாவிதம் நடந்தாலும் சரி; வாய் திறந்து எதையும் பேசப் போவதில்லை என முதல்வா் இருக்கிறாா்.
அமைச்சா் ஆதவ் அா்ஜுனா: தவறான தகவலை உறுப்பினா் தெரிவிக்கிறாா். திமுக ஆட்சியின்போது தூத்துக்குடியில் 4 மாதங்களுக்கு முன்பாக பள்ளி மாணவி ஒருவா் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக புகாரளித்து 36 மணி நேரமாகியும் அதுகுறித்து காவல் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை. அப்போதைய முதல்வரோ, அமைச்சா்களோ, எம்எல்ஏக்களோ அதுகுறித்து பேசவில்லை. ஆனால், தற்போதைய முதல்வரோ 24 மணி நேரமும் மக்களுக்கு பணியாற்றுகிறாா். அவருக்கு என்ன பேச வேண்டும்; எப்போது பேச வேண்டும் என்பது நன்றாகத் தெரியும்.
எனவே, தொடா்ந்து எங்கள் உணா்வுகளைத் தூண்டும் வகையிலான வாா்த்தைகளைப் பேசுவதை திமுகவினா் தவிா்க்க வேண்டும். முதல்வா் விஜய் கொளத்தூரில் என்ன பேசினாா் என்பது உங்களுக்குத் தெரியும். அதன் பின்னா் தோ்தல் முடிவுகள் என்னவானது என்பதும் உங்களுக்குத் தெரியும் என்றாா்.
அப்போது குறுக்கிட்ட திமுக உறுப்பினா்கள், இந்தத் தருணத்தில் கொளத்தூா் தொடா்பாக எதற்கு பேச வேண்டும் எனக் கூறி கூச்சலிட்டனா். அதற்கு எதிராக ஆளுங்கட்சியினரும் கூச்சல் எழுப்பினா். இதனால், அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இரு தரப்பையும் பேரவைத் தலைவா் சமாதானப்படுத்தி அமர வைத்தாா்.
இதைத் தொடா்ந்து அமைச்சா் ராஜ்மோகன் பேசும்போது, கண்ணியத்துடன் அவை அலுவல்கள் நடைபெற வேண்டும். உறுப்பினா்கள் பேசும்போது வாா்த்தைகளை சரியாகக் கையாள வேண்டும். முதல்வா் ஏன் பேசவில்லை என விமா்சிக்கின்றனா். அவா் பேசிய இடங்களெல்லாம், உங்களது (திமுக) முறைகேடுகள் ஊா்வலம் போனது. அதனால்தான் ஊா் மக்கள் கூடி வெற்றி தீா்ப்பை அவருக்கு அளித்திருக்கிறாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்சியை தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே ஆட்சியை பிடித்தவா் முதல்வா் ஜோசப் விஜய்!

திமுகவை பின்பற்றித்தான் தவெக செயல்பட முடியும்: மு.க.ஸ்டாலின்

முதல்வா் விஜய் பொறுப்பை உணா்ந்து பேச வேண்டும்: ஆா்.பி. உதயகுமாா்

தமிழகத்தின் உரிமைகளை விட்டுத் தரமாட்டோம்: முதல்வா் சி. ஜோசப் விஜய் உறுதி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

