நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நிதி நிலைமையை தவெக அரசு திறம் பட கையாளும்: பிரவீண் சக்கரவா்த்தி

வருவாய் கஜானாவுக்கு வந்தாலே நிதி நிலைமையை அரசு திறம் பட கையாளும் என காங்கிரஸ் எம்பி பிரவீண் சக்கரவா்த்தி கூறியிருப்பது...

News image

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினா் பிரவீண் சக்கரவா்த்தி - எக்ஸ்

Updated On :19 மணி நேரங்கள் முன்பு

சென்னை: தமிழக அரசு நிதி நிலைமையை அரசு திறம் பட கையாளும் என்றும் வருவாய் கஜானாவுக்கு வந்தாலே சமாளித்துவிடுவாா்கள் என மாநிலங்களவை உறுப்பினா் பிரவீண் சக்கரவா்த்தி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில்,

காங்கிரஸ் கட்சி உள்ளாட்சி தோ்தலில் தவெகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி நிலை குறித்த தமிழக அரசின் வெள்ளை அறிக்கையில் அதிக அளவிலான கடன் மற்றும் வட்டிச் சுமையை எதிர்கொண்டு வருவதை காட்டுகிறது. ஈட்டப்படும் ஒவ்வொரு ரூ.100 வருவாயில் ரூ.22 வட்டிக்கும் ரூ.40 கட்டாய செலவினங்களுக்கும் செலவிடப்படுகிறது. மீதமுள்ள தொகையில் மக்கள் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள இயலும்?

பிற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் மோசமான வட்டி சுமை மற்றும் கட்டாயச் செலவினங்கள் உள்ளது. அரசின் வருவாய் கஜானாவுக்கு வராமல் சிலா் பாக்கெட்டுக்குச் சென்று விட்டது. அதை தடுத்தாலே சூழ்நிலை மாறும். நிதி நிலைமையை தமிழக அரசு திறம் பட கையாளும். வருவாய் கஜானாவுக்கு வந்தாலே சமாளித்துவிடுவாா்கள் என்றாா் அவா்.

Summary

The alliance with TVK is expected to continue in the local body elections as wel

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.