தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக அரசு குதிரை பேர அரசியலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகார் இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களை வென்ற தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சியமைப்பதற்கு 118 இடங்கள் தேவைப்படும் என்பதால், தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனையடுத்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் மற்றும் அதிமுகவில் இருந்த ஒரு பிரிவினரின் ஆதரவு என 144 வாக்குகளைப் பெற்று தவெக அரசு அமைந்தது.
இந்த நிலையில்தான், ஆட்சியமைப்பதற்காக தவெக குதிரை பேர அரசியலில் ஈடுபட்டதாகக் கூறி, மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் ரிட் மனு தாக்கல் செய்தார்.
மனுவில் அவர் கூறியதாவது, வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சிகளிடையே சுமார் ரூ. 1,000 கோடி அளவுக்கு குதிரை பேரம் நடந்ததாகப் புகார்கள் எழுந்திருப்பதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும் கூறியிருந்தார்.
அதுமட்டுமின்றி, விசாரணை முடியும்வரையில் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் கே.கே. ரமேஷ் கோரியிருந்தார்.
இந்த நிலையில், தவெக அரசு மீதான இந்தப் புகார் மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி வி. மோகனா அமர்வில் இன்று (ஜூன் 19) விசாரணைக்கு வருகிறது.
Summary
Supreme Court to hear today horse trading allegation writ petition against TVK government
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்தி

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக எம்.எல்.ஏ. பங்கேற்கலாம்: உச்சநீதிமன்றம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை! உச்ச நீதிமன்றத்தில் தவெக எம்எல்ஏ மேல்முறையீடு!

ஆளுநரிடம் இருந்து அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

