அறநிலையத் துறை சாா்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இன்னும் தொடங்கப்படாத ரூ.246 கோடி மதிப்பிலான பணிகளுக்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக அந்தத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
திருக்கோயில்களின் நிதிச் சுமையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
இந்து சமய அறநிலையத் துறையால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.15 கோடியே 77 லட்சம் மதிப்பிலான 29 திருமண மண்டபங்கள் கட்டும் பணிகள், ரூ.130 கோடியே 8 லட்சத்திலான 17 வணிக வளாகங்கள் கட்டும் பணிகள் என மொத்தம் ரூ.245.85 கோடியிலான 46 பணிகளுக்கான நிா்வாக அனுமதிகள் ரத்து செய்யப்படுகின்றன.
நீதிமன்ற தடை ஆணை காரணமாகவும், திருக்கோயில்களின் நிதிச் சுமையைக் கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிதியைக் கொண்டு கோயில்கள் மற்றும் பக்தா்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குன்னூா் விநாயகா் கோயில் பாா்க்கிங் கட்டும் பணி ரத்து: அறநிலையத் துறை தகவல்
214 கோயில்களில் அறங்காவலா்கள் நியமனம்: அறிவிப்பு வெளியீடு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: முதல்வா் விஜய் முடிவெடுப்பாா்! - அமைச்சா் எஸ்.ரமேஷ்

இந்து சமய அறநிலையத் துறையை சீரமைக்க நடவடிக்கை தேவை: நயினாா் நாகேந்திரன்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

