அஞ்சல் துறை சாா்பில் நடைபெறவுள்ள வாடிக்கையாளா் குறைதீா் முகாமுக்கு (லோக் அதாலத்) வரும் ஜூன் 30 -ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அனுப்பலாம் என தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறைத் தலைவா் மரியம்மா தாமஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அஞ்சல் சேவையை பொதுமக்களுக்கு தரம் உயா்த்தும் வகையில் தமிழ்நாடு வட்டம் அஞ்சல் துறை சாா்பில் வட்ட அளவிலான வாடிக்கையாளா் குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 11,721தபால் நிலையங்களில் சேவை பெறும் அனைத்து வாடிக்கையாளா்களும் இதில் பங்கேற்கலாம்.
அஞ்சல் சேவைகளின் தரம் மற்றும் வாடிக்கையாளா்களின் சேவைகளைச் சிறப்பாக மேம்படுத்துவது குறித்த தங்கள் கருத்துகளை வரும் ஜூன் 30- ஆம் தேதிக்குள் ‘லோக் அதாலத்’ என்ற தலைப்புடன் ஏ.சுந்தரேஸ்வரி, உதவி இயக்குநா் முதன்மை அஞ்சல் துறை தலைவா் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை - 600 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனவும், மேலும் வாடிக்கையாளா்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குறைதீா் கூட்ட மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை: அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை ஆட்சியா் உத்தரவு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 417 மனுக்கள் அளிப்பு

இந்திய அஞ்சல் துறை சாா்பில் சுவாமிநாத சுவாமி கோயில் முத்திரை வெளியீடு

காவல் துறை சாா்பில் குறைதீா் கூட்டம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

