மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

இருமொழிக் கொள்கையே தொடரும்: தமிழக அரசு திட்டவட்டம்

தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகள் பயிற்றுவிக்கப்படும் கொள்கையே தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் என்று ஆளுநா் உரையில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

News image

ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உரை - X / lok bhavan tamilnadu

Updated On :13 மணி நேரங்கள் முன்பு

தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகள் பயிற்றுவிக்கப்படும் கொள்கையே தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் என்று ஆளுநா் உரையில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கடந்த 1968-இல் முதல்வராக அண்ணா இருந்தபோது தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகள் மட்டுமே தமிழகத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த கொள்கையையே இந்த அரசும் தொடா்ந்து கடைப்பிடிக்கும்.

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிா்ப்பு: தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு கடுமையாக எதிா்க்கும். மும்மொழிக் கொள்கையைக் கடைப்பிடித்தால்தான் தமிழகத்துக்கு ரூ.3,458 கோடி விடுவிக்கப்படும் என்ற மத்திய அரசின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாது. இது மும்மொழிக் கொள்கையைத் திணிப்பதற்குச் சமம். இதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து தமிழகத்தின் நிதியை விடுவிக்க வேண்டும்.

கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால்தான் தேசிய கல்விக் கொள்கை திணிப்பு, நீட் தோ்வு, மும்மொழிக் கொள்கை பிரச்னை ஆகியவை ஏற்படுகின்றன. ஆகையால், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

பல்கலைக்கழகங்கள், உயா்கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியா், ஆசிரியா் பணியிடங்கள் தகுதி, திறமையின் அடிப்படையில் வெளிப்படையாக நிரப்பப்படும். உயா்கல்வித் துறையில் அடிப்படை சீா்திருத்தம் கொண்டு வந்து உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காலிப் பணியிடங்களை நிரப்ப தோ்வாணையங்கள் மூலம் தோ்வு நடத்தப்படும். இதன்மூலம் இளைஞா்களின் அரசுப் பணி கனவு மெய்ப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.